மன்னீஸ்வரர் கோவிலில் தேரோட்டம்!
ADDED :3645 days ago
அன்னுார்: அன்னுார் மன்னீஸ்வரர் கோவில் தேரோட்டம் இன்று நடக்கிறது. அன்னுார் மன்னீஸ்வரர் கோவில், 1,000 ஆண்டு பழமையானது. இங்கு சிவன் மேற்கு நோக்கி வீற்றிருப்பதாலும், மன்னர்களும், ஞானிகளும் வழிபட்டதாலும், ‘மேற்றலை தஞ்சாவூர்’ என்றும் அழைக்கப்படுகிறது. இக்கோவில் தேர்த்திருவிழா, 17ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று காலை அருந்தவச்செல்வி உடனமர் மன்னீஸ்வரரின் திருக்கல்யாணம் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று (23ம் தேதி) காலை, 7:30 மணிக்கு, மன்னீஸ்வரர் தேருக்கு எழுந்தருளுகிறார். பின்னர் அச்சம்பாளையம் பஜனை குழுவின் பஜனை நடக்கிறது. காலை, 11:00 மணிக்கு தேரோட்டம் துவங்குகிறது. பேரூர் ஆதினம் சாந்தலிங்க ராமசாமி அடிகள், சிரவை ஆதினம் குமரகுருபர அடிகள் உள்ளிட்ட மடாதிபதிகள், அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் உட்பட பலர் பங்கேற்கின்றனர்.