விருத்தகிரீஸ்வரர் கோவிலில் சந்தனக்காப்பு அலங்காரம்
ADDED :3646 days ago
விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவிலில் பிந்துமாதவ பெருமாள், கஜலட்சுமி தாயார் சந்தனக்காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர். விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் வைகுண்ட ஏகாதசிப் பெருவிழா, கடந்த 20ம் தேதி துவங்கியது. இதையொட்டி, பிந்துமாதவ பெருமாள், கஜலட்சுமி தாயாருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. அன்று காலை மோகினி அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தார். நேற்று முன்தினம் வைகுண்ட ஏகாதசி சிறப்பு பூஜை நடந்தது. நேற்று காலை பெருமாள், தாயார் சந்தனக்காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர்.