உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீரராகவப் பெருமாள் கோவில் உண்டியல் வசூல் ரூ.3.75 லட்சம் !

வீரராகவப் பெருமாள் கோவில் உண்டியல் வசூல் ரூ.3.75 லட்சம் !

திருப்பூர்: வைகுண்ட ஏகாதசி, சொர்க்கவாசல் திறப்பு நாளில், திருப்பூர் ஸ்ரீவீர ராகவப் பெருமாள் கோவிலில், 3.75 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. வீரராகவப் பெருமாள் கோவிலில், வைகுண்ட ஏகாதசி விழா நடந்து வருகிறது. நேற்று முன் தினம் அதிகாலை, சொர்க்கவாசல் திறப்பு, கருட சேவை நிகழ்ச்சி  நடந்தது; ஆயிரக்கணக்கான பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து, சுவாமி தரிசனம் செய்தனர். விழாவை ஒட்டி, கோவில் நிர்வாகம் சார்பில், தற்காலிக  உண்டியல் வைக்கப்பட்டிருந்தது. இதில், ஒரு லட்சத்து, 11 ஆயிரம் ரூபாய் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். மேலும்,  50 ரூபாய் சிறப்பு கட்டண தரிசன டிக்கெட் விற்பனை மூலம், 2.65 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. ஒரே நாளில், 3.75 லட்சம் ரூபாய் கோவிலுக்கு வருவாய் கிடைத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !