கிறிஸ்துமஸ் சிந்தனை: நல்வாழ்த்து நாம் பெறுவோம்
பெத்லகேமில் 2015 ஆண்டுகளுக்கு முன்பு கன்னி மரியாளுக்கு ஒரு பாலகன் பிறந்தார். அவருக்கு இயேசு கிறிஸ்து என்று பெயர். இயேசு என்றால் விடுதலையாக்குபவர் என்றும், கிறிஸ்து என்றால் தீர்க்கதரிசி என்றும் அர்த்தம். ஆம்...அவர் மக்களை பாவங்களில் இருந்து விடுவிக்க சிலுவையில் ரத்தம் சிந்தி மரித்தார். அவர் ஒருவருக்கும் சிறு தீமைகூட செய்ததுஇல்லை. என்னை பாவியென்று உங்களில் யார் என்னைக் குற்றப்படுத்தக்கூடும் என்று சவால் விட்டு, எள் அளவு கூட பாவமில்லாத பரிசுத்தராய் வாழ்ந்தார். அவர் மரித்த மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார். இதை மரித்தேன்.. ஆனாலும் சதாகாலமும் உயிரோடே இருக்கிறேன் என்கிறார். “இதோ சீக்கிரமாய் வருகிறேன். அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடு கூட வருகிறது,” என்றும் அவர் சொல்லியிருக்கிறார். மேலும் “மகனே! மகனே! உன் இதயத்தை எனக்கு தா. நான் உன்னில் வந்து வாசம் பண்ண விரும்புகிறேன்” என விருப்பம் தெரிவித்து அழைக்கிறார். நாம் யாராக இருந்தாலும், எந்த நிலைமையில் இருந்தாலும் வாழ்க்கையை பிரகாசப்படுத்துவார். அவர் குழந்தையாய் பிறந்த நன்னாளில் அவரது வாழ்த்தைப் பெறுவோம். நல்வாழ்வு அடைவோம்.