உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாரிமுத்து சித்தர் குருபூஜை: டிச. 27ல் தீர்த்தாபிஷேகம்

மாரிமுத்து சித்தர் குருபூஜை: டிச. 27ல் தீர்த்தாபிஷேகம்

கன்னிவாடி: வெல்லம்பட்டி மாரிமுத்துசுவாமி கோயில் குருபூஜை விழாவில், தீர்த்தாபிஷேகம் டிச. 27ல் நடக்கிறது.கசவனம்பட்டி அருகே வெல்லம்பட்டியில் பிரசித்திபெற்ற மாரிமுத்துசித்தர் கோயில் உள்ளது. ஆண்டுதோறும் மார்கழி புனர்பூச நட்சத்திரத்தில், குரு பூஜை விழா நடக்கும். வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான சாதுக்கள், குருபூஜை விழாவில் பங்கேற்பது வழக்கம். இந்தாண்டிற்கான குருபூஜை, டிச. 26ல் தீர்த்த அழைப்புடன் துவங்குகிறது. இதற்காக மாலையணிந்த பக்தர்கள், கன்னிவாடி சோமலிங்கர், சுருளி, ராமேஸ்வரம், கொடுமுடி பகுதிகளில் இருந்து புனிதநீர் எடுத்து வருகின்ற னர். குருபூஜையின் துவக்கமாக முளைப்பாரி, தீர்த்த குடங்கள் ஊர்வலம் நடைபெறும். டிச. 27ல், திருவாசகம் முற்றோதல் நடக்கும். விநாயகர் வழிபாடு, கனிவர்க்கம் சாற்றுதலுடன் பாலாபிஷேகம் நடக்கிறது. காலை 8 மணிமுதல் தொடர் அன்னதானம், தேவார, திருவாசக பாராயணம், பஜனை நடைபெற உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !