திருப்பூர் சிவாலயங்களில் ஆருத்ரா தரிசன விழா
திருப்பூர்: திருப்பூர் வட்டாரத்திலுள்ள சிவாலயங்களில், திருவாதிரை விழா நாளையும், ஆருத்ரா தரிசன விழா நாளை மறுநாளும் நடைபெறுகிறது. திருப்பூர், விஸ்வேஸ்வரசுவாமி கோவிலில் ஆருத்ரா தரிசன விழா, கடந்த 17ல், மாணிக்கவாசகர் திருவெம்பாவை உற்சவத்துடன் துவங்கியது. நாளை, இரவு, 7:00க்கு, திருக்கல்யாணம் நடக்கிறது. 26ம் தேதி, அதிகாலை, 3:00க்கு, பல்வேறு திரவியங்கள், மூலிகைகள் சுவாமிக்கு மகாபிஷேகம் நடக்கிறது. காலை, 6:30க்கு, ஆருத்ரா தரிசனம், தீபாராதனை மற்றும் சிவகாமி அம்மன் உடனமர்ஸ்ரீ நடராஜ பெருமான் பட்டி சுற்றுதல், வீதி உலா நடக்கிறது. 27ம் தேதி, வசந்த உற்சவம், மஞ்சள் நீராட்டு நடக்கிறது.
* நல்லூர், ஸ்ரீ விஸ்வேஸ்வரசுவாமி, விசாலாட்சி அம்மன் மற்றும் சுப்ரமணிய சுவாமி கோவிலில், ஆருத்ரா தரிசன விழா, 26ல் நடக்கிறது. அதிகாலை, 5:00க்கு, ஸ்ரீ நடராஜர் அபிஷேகம், 8:00க்கு, ஆருத்ரா தரிசனம், 10:00க்கு, பட்டி சுற்றுதல் நிகழ்ச்சி நடக்கிறது.
* அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில், நாளை மாலை, 5:00 மணிக்கு, கிளி வாகனத்தில், திருவாதிரை நாச்சியார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கிறார். நாளை மறுநாள் அதிகாலை, 4:00 மணி முதல் நடராஜ பெருமான், சிவகாமியம்மனுக்கு, 48 திரவியங்களில் மகாபி ஷேகம், சிறப்பு அலங்கார தீபாராதனை, சுவாமி புறப்பாடு ஆகியன நடைபெறுகிறது.
* திருப்பூர், சர்க்கார் பெரியபாளையம் சுக்ரீஸ்வரர் கோவிலில், நாளை மாலை திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. 26ல் அதிகாலை, 5:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை, பட்டிசுற்றல், சுவாமி புறப்பாடு ஆகியன நடைபெறும். விழாவையொட்டி, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.