சபரிமலைக்கு 100 சிறப்பு பஸ்கள்
ADDED :3947 days ago
கேரள மாநிலம், சபரிமலையில், டிச., 27ல் மண்டல பூஜை, ஜனவரியில் மகர விளக்கு பூஜை நடைபெற உள்ளது; இதில், பங்கேற்க செல்லும் தமிழக பக்தர்களின் வசதிக்காக, 100க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில், சென்னை, புதுச்சேரி, மதுரை, திருச்சி உள்ளிட்ட இடங்களில் இருந்து, சிறப்பு பஸ்கள் பம்பைக்கு இயக்கப்படுகின்றன. சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து, 22 பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்கள், ஜனவரி 16 வரை இயக்கப்படும்.- நமது நிருபர் -