உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பதியில் பக்தர்களுக்கு புதிய ஆப்

திருப்பதியில் பக்தர்களுக்கு புதிய ஆப்

திருப்பதி: திருப்பதி நகராட்சி, பக்தர்களுக்காக, புதிய மொபைல் போன், ஆப் வசதியை துவக்கியுள்ளது. திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும், உள்நாடு மற்றும் வெளிநாட்டு பக்தர்கள், ஓட்டல்கள், ரயில், விமான நிலையம் உள்ளிட்ட தகவல்களை பெற சிரமப்படுகின்றனர். அவர்களின் வசதிக்காக, திருப்பதி 1 ஆப் என்ற புதிய செயலியை, திருப்பதி நகராட்சி துவக்கியுள்ளது. இந்த அப்ளிகேஷனை, பக்தர்கள் தங்கள் அலைபேசியில் பதிவிறக்கம் செய்து கொண்டால், திருப்பதி, திருமலை குறித்த அனைத்து விவரங்களையும் தெரிந்து கொள்ள முடியும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !