உத்தரகோசமங்கை மரகத நடராஜருக்கு மகா அபிஷேகம்: பக்தர்கள் பரவசம்!
கீழக்கரை: உத்தரகோசமங்கை மங்களநாதசுவாமி சமேத மங்களேஸ்வரி தாயார் கோயில் மிகவும் பிரசித்திபெற்ற மாணிக்கவாசகரால் பாடல் பெற்ற சிவாலயம் ஆகும். பச்சை மரகத கல்லால் ஆன நடராஜர் சிலை உள்ளது. கடந்த டிச., 17 வியாழக்கிழமை காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. ஒலி, ஒளியின் அதிர்வுகளால் பாதிப்பு ஏற்படாத வண்ணம் ஆருத்ரா தரிசனத்திற்காக வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே மரகத நடராஜரின் திருமேனில் பூசப்பட்ட சந்தனம் படி களையும் நிகழ்ச்சி காலை 9:30 மணியளவில் நடந்தது. காலை 10:30 மணி முதல் சந்தனம் கலையப்பட்ட மரகத நடராஜருக்கு, மஞ்சள், திரவியப்பொடி, பால், தயிர், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான அபிஷேகங்கள் நடந்தது. பின்னர் சந்தனாதித் தைலம் பூசப்பட்டது. இந்த அபூர்வ தரிசனத்திற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் வரிசையாக தரிசனம் செய்தனர். பின்னர் 10:30 மணியளவில் ஆருத்ரா மகா அபிஷேகம் நடைபெற்று, கல்தேர் மண்டபத்தில் கூத்தர் பெருமான் எழுந்தரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான, தேவஸ்தான நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.