ராமமூர்த்தி சுவாமி பஜனை மடத்தில் ஐயப்ப லட்சார்ச்சனை வழிபாடு
ADDED :3597 days ago
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு ராமமூர்த்தி சுவாமி பஜனை மடத்தில் நடந்த ஐயப்ப லட்சார்ச்சனை விழாவின் இறுதிநாளில் லட்சார்ச்சனை வழிபாடு நடந்தது. அதிகாலையில் வேதபாராயணங்களுடன் வழிபாடு நடத்தப்பட்டு இறைவனின் ஜோதி வடிவத்தை குறிக்கும் வகையில் ஜோதிவிளக்குகள் ஏற்றப்பட்டன. பின்னர் பக்தர்களுக்கான கன்னிபூஜையும், விரதமிருந்த பக்தர்களின் ஐயப்ப லட்சார்ச்சனை , ஐயப்பசுவாமிக்கு 18 படி பூஜை நடந்தது. முன்னதாக மீனாட்சி பாலாஜியின் பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்ச்சி நடந்தது. பக்தசபா தலைவர் வைகுண்டராமன், செயலாளர் சங்கரநாராயணன், பொருளாளர் சங்கரசுப்பிரமணியம் ஏற்பாடு செய்தனர்.