உள்ளூர் செய்திகள்

நோய்கள் தீர..

விஷ்ணு சகஸ்ரநாமம் சொல்லிவர, உடலில் புத்துணர்ச்சியும், மனஅமைதியும் ஏற்படும்; ரத்த ஓட்டம் சீராகும். மனநோய் குணமாக அபிராமி அந்தாதியில் 27ம் பாடலான உடைத்தனை வஞ்சப் பிறவியை என்னும் பாடலை தினமும் பாராயணம் செய்யலாம். கண் நோய் குணமாக ஆதித்ய ஹிருதயம் படித்து வரலாம். இதய நோய் தீர, கிருஷ்ணாஷ்டகம் சொல்லி வரலாம். வாத நோய் நீங்க, குருவாயூரப்பன் பஞ்சரத்னம் படித்து வரலாம். குருவாயூரப்பனுக்கு அபிஷேகம் செய்த எண்ணெயை வாதநோய் பாதித்த பகுதிகளில் தடவி வர குணம் உண்டாகும். பூஜை அறையில் குத்துவிளக்கு ஏற்றி, 18 புராணங்களின் பெயர்களைக் கொண்ட மந்திரத்தை உச்சரித்து பாயசம் நிவேதனம் செய்ய, மலட்டுத்தன்மை நீங்கும். கருடதண்டகம் சொல்லி வர, விஷக்கடியால் ஏற்பட்ட பாதிப்புகள் நீங்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !