உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வத்திராயிருப்பு காசிவிஸ்வநாதர் கோயிலில் அஷ்டமி பிரதக்ஷண விழா

வத்திராயிருப்பு காசிவிஸ்வநாதர் கோயிலில் அஷ்டமி பிரதக்ஷண விழா

வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு விசாலாட்சி உடணுறை காசிவிஸ்வநாதர் கோயிலில் கோட்டப்பிறையை முன்னிட்டு அஷ்டமி பிரதக்ஷண விழாவும், சுவாமி வீதியுலாவும் நடந்தது.

இறைவன் பூமியில் உள்ள சகல கோடி ஜீவராசிகளுக்கும் உணவளித்த தினம் அஷ்டமி பிரதக்ஷண நாளாகும். இதையொட்டி சிவஸ்தலங்களில் கோட்டப்பிரதஷ்டமி அன்று அஷ்டமி பிரதக்ஷண தினமாக கொண்டாடப்படும். வத்திராயிருப்பு காசிவிஸ்வநாதர் கோயிலில் பாரம்பரிய முறைப்படி இவ்விழா நேற்று நடந்தது. காலையில் கோமளாம்பிகை அம்மனுக்கும், சந்திரசேகரசுவாமிக்கும் சிறப்பு அபிஷேகமும், மார்கழி பூஜையும் நடத்தப்பட்டது. இதை தொடர்ந்து சுவாமி ஜீவராசிகளுக்கு படியளக்கும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் சுவாமி அலங்கார கோலத்தில் சப்பரத்திலும், அதை தொடர்ந்து காளைவாகனத்திலும் எழுந்தருளினார். சிறப்பு பூஜைகளுக்கு பிறகு வீதியுலா நடந்தது.

இறைவன் ஜீவராசிகளுக்கு உணவு வழங்கியதை குறிக்கும் வகையில் சுவாமி வீதியுலா செல்லும் வழிநெடுகிலும் அரிசி, குருணை உள்ளிட்ட உணவு தூவப்பட்டது. மீண்டும் கோயிலை சென்றடைந்த சுவாமி, அம்பாளுக்கு சோடச உபஜாரண பூஜைகள் நடத்தப்பட்டது. பக்தசபா நிர்வாகிகள் சேதுசுந்தரப்பட்டர், காமேஸ்வரப்பட்டர் கோயில் நிர்வாக அதிகாரி அறிவழகன் ஏற்பாடு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !