உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சரநாராயண பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம்

சரநாராயண பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம்

பண்ருட்டி: திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில், பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, நேற்று அதிகாலை 5:00 மணிக்கு, சுப்ரபாதம், 7:00 மணிக்கு, நித்தியபடி பூஜை, விஸ்வரூப தரிசனமும் நடந்தது. தொடர்ந்து, மூலவர் பெருமாள், சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். உற்சவர் பெருமாள் ஸ்ரீதேவி, பூமிதேவி சகிதமாக திருக்கண்ணாடி அறையில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மதியம் 1:00 மணிக்கு, உச்சிகால பூஜை, மாலை 4:00 மணிக்கு, நடைதிறப்பு, இரவு 9:30 மணிக்கு, ஏகாந்த சேவை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !