செஞ்சி வெங்கட்ரமணர் கோவிலில் புத்தாண்டு சிறப்பு வழிபாடு
ADDED :3781 days ago
செஞ்சி: செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் புத்தாண்டை முன்னிட்டு சாமி கோவில் உலா நடந்தது.
செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் நேற்று புத்தாண்டு சிறப்பு வழிபாடு நடந்தது. இதை முன்னிட்டு மூலவர் மற்றும் உற்சவர் பூதேவி, ஸ்ரீதேவி சமேத வெங்கட்ரமணருக்கு சிறப்பு திருமஞ்சனமும், சிறப்பு அலங்காரமும் செய்தனர். முற்பகல் 11:00 மணிக்கு பூதேவி, ஸ்ரீதேவி சமேத வெங்கட்ரமணர் கோவில் உலா நடந்தது. நீண்ட வரிசையில் நின்று, பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இதில் வழக்கறிஞர்கள் பூபதி, ஸ்ரீபதி, விழா குழுவைச் சேர்ந்த வைகைதமிழ் மற்றும் பஜனை கோஷ்டியினர் கலந்து கொண்டனர்.