சிறப்பு அலங்காரத்தில் வீற்றிருந்த பெருமாள்
ADDED :3781 days ago
பெண்ணாடம்: மார்கழி மாத வெள்ளிக்கிழமையையொட்டி, பெண்ணாடம் வீற்றிருந்த பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். இதையொட்டி, வேதநாராயண பெருமாள், வேதவல்லி தாயாருக்கு நேற்று காலை 7:00 மணியளவில் பால், தயிர், சந்தனம், இளநீர், பன்னீர் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர். இதேபோல், அரியராவி விநாயகர் கோவிலில் இருந்து, பஜனைக் குழுவினர், சிறுவர்கள் இணைந்து திருப்பாவை, திருவெம்பாவை பாடல்களை பாடியபடி முக்கிய வீதிகளில் ஊர்வலம் வந்தனர்.