அண்ணாமலையார் கோவிலில் கிரிவலம்
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், புத்தாண்டு முன்னிட்டு, பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து, கிரிவலம் சென்றனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, அதிகாலை, 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, சிறப்பு அபி?ஷகம் நடந்தது. பின், விநாயகர், உற்சவ மூர்த்திகளுக்கு வெள்ளி கவசம், மூலவருக்கு தங்க கவசம் சாத்தப்பட்டு, பூஜை நடந்தது. இதில், பங்கேற்ற பக்தர்கள், தீர்த்தக்குளத்தில் நீராடி, சுவாமியை தரிசித்து, நவக்கிரக சன்னதிகளில், நெய் தீபம் ஏற்றி வழிபட்டனர். பின், 14 கி.மீ., நடந்து சென்று கிரிவலம் சென்றனர். இதேபோல், பூத நாராயணன் கோவிலில் மார்கழி மாத மற்றும் புத்தாண்டு வழிபாடு நடந்தது. ஆவணியாபுரம் லட்சுமி நரசிம்மர்
கோவில், இஞ்சிமேடு சிவன் கோவில், படவேடு லட்சுமி நரசிம்மர் கோவில் உள்ளிட்ட
ஆலயங்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.