செஞ்சி சிறப்பு ஹோமம்
ADDED :3721 days ago
செஞ்சி: காரியமங்கலம் கருணா சாயி பாபா கோவிலில் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு
ஹோமம் நடந்தது.
செஞ்சி அருகே உள்ள காரியமங்கலம் கருணா சாயி பாபா கோவிலில், நேற்று புத்தாண்டு சிறப்பு வழிபாடு நடந்தது. இதை முன்னிட்டு கருணா சாயிபாபா, ராஜராஜேஸ்வரிக்கு சிறப்பு அபிஷேகம்
அலங்காரம் செய்தனர். காலை 8:00 மணிக்கு உலக நன்மைக்காக கணபதி, லட்சுமி, தன்வந்தரி,
ஹோமம் நடந்தது. கருணா சாயி பாபாவுக்கு மகா தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான
பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.