திருப்பரங்குன்றத்தில் தெப்பத்திருவிழா ஜன.11ல் கொடியேற்றம்
ADDED :3724 days ago
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தெப்பத்திருவிழா கொடியேற்றம் ஜன.,11 காலை 9.30 முதல் 10 மணிக்குள் நடக்கிறது.விழா நாட்களில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை தினமும் ஒரு வாகனத்தில் வீதி உலா வருவர். ஜன. 19ல் தை கார்த்திகை விழாவும், காலை 8.30 மணி முதல் 9.00 மணிக்குள் தெப்பம் முட்டுத்தள்ளும் நிகழ்ச்சியும், ரத வீதிகளில் சிறிய வைரத் தேரோட்டமும் நடக்கும்.தெப்பக்குளத்தில் மிதவை தெப்பத்தில் ஜன.,20ல் சுவாமி எழுந்தருள, தெப்பத்திருவிழா நடக்கும். ஜன.,11 முதல் 20 வரை கோயிலில் தங்கரதம் புறப்பாடு நடக்கிறது, என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.