உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மருந்தீஸ்வரர் அஷ்டலிங்க கோயில் மண்டலாபிஷேக பூஜை நிறைவு விழா

மருந்தீஸ்வரர் அஷ்டலிங்க கோயில் மண்டலாபிஷேக பூஜை நிறைவு விழா

சென்னை: சென்னை, ஆவடி, கோவில்பதாகையில் அமைந்துள்ள ஸ்ரீ மங்களம் படவட்டம்மன் ஸ்ரீ மருதாம்பாள் சமேத ஸ்ரீ மருந்தீஸ்வரர் அஷ்டலிங்க கோயில் மண்டலாபிஷேக நிறைவு விழா நடைபெற்றது. இதை ஒட்டி அனைத்து தெய்வங்களுக்கும் மண்டலாபிஷேக நிறைவு பூஜை, ஹோமங்கள் மற்றும் 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. நிறைவாக தீபாராதனைக்குப் பின் பிரசாதம் விநியோகிக்கப்பட்டது. இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை செயலாளர் ஜெய்சங்கர் சாமி, தலைவர் துரைமுத்து, பொருளாளர் தர்மகுரு, சிறப்பு ஆலோசகர் குமார் மற்றும் கோவில் கமிட்டி உறுப்பினர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !