திருமலை மலை பாதை சீரமைப்பு விறுவிறு
ADDED :3619 days ago
திருப்பதி: திருமலை மலைப்பாதை சீரமைக்கு பணி விரைவாக நடக்கிறது.திருமலையில் பெய்த கன மழையால், இரண்டாவது மலை பாதையில், பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. பொங்கல் விடுமுறைக்கு பின், திருமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும்.இந்த நேரத்தில் பணிகளை துவக்கி, மார்ச் மாதத்திற்குள், மலை பாதையை சீரமைக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இதையடுத்து, பணிகள் விறுவிறுப்பாக நடக்கின்றன. இதற்கிடையே, பெண்கள், குழந்தைகளுக்கு பசுவின் முக்கியத்துவத்தை உணர்த்த, கோ பூஜை நடத்த தேவஸ்தானம் முடிவு செய்து உள்ளது. அதன் படி, தெலுங்கானா மற்றும் ஆந்திர மாநிலங்களில், 230 கோசாலைகளில், இம்மாதம், 16 மற்றும் 23ம் தேதிகளில், கோபூஜை நடக்க உள்ளது.