உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி மலைக்கோயில் உண்டியலில் ரூ.2.11கோடி வசூல்

பழநி மலைக்கோயில் உண்டியலில் ரூ.2.11கோடி வசூல்

பழநி: பழநி மலைக்கோயிலில் உண்டியலில் 20 நாட்களில் ரொக்கம் ரூ. 2 கோடியே 11 லட்சத்து 88 ஆயிரம் கிடைத்துள்ளது. பழநி மலைக்கோயிலில் கார்த்திகை மண்டபத்தில் உண்டியல் எண்ணிக்கை நடந்தது. இதில் தங்கம் 590 கிராம், வெள்ளி 6 ஆயிரத்து 550 கிராம், வெளிநாட்டு கரன்சி 592 மற்றும் ரொக்கமாக ரூ. 2 கோடியே 11 லட்சத்து 88 ஆயிரத்து 855 கிடைத்துள்ளது. தங்கத்திலான வேல், தொட்டில் மற்றும் 6 அடி உயமுள்ள "மெகா சைஸ் குத்துவிளக்குகள் உள்ளிட்ட பொருட்களை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !