எண்ணெய் காப்பு உற்சவத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள்!
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் மார்கழி எண்ணெய்காப்பு உற்சவம் துவங்கியது.இதை முன்னிட்டு ஆண்டாள் தங்கபல்லக்கில் மாடவீதிகள் வழியாக எழுந்தருளி ராஜகோபுரம் முன்பு, போர்வை படி களைந்து அரையர்சேவை நடந்தது. மண்டபங்கள் எழுந்தருளி நாடகசாலை ஸ்ரீனிவாசன் சன்னிதி வழியாக எண்ணெய் காப்பு மண்டபம் வந்தடைய அங்கு எண்ணெய்காப்பு உற்சவம் நடந்தது.பாலாஜி பட்டர் தலைமையில் சிறப்பு பூஜைகள் நடந்தது. அனந்தராமகிருஷ்ணன் பட்டர், ராஜீ பட்டர், ஸ்தானிகம் ரமேஷ், கிருஷ்ணன் பங்கேற்றனர். இரவு 9 மணிக்குமேல் துளசி வாகனத்தில் ஆண்டாள் புறப்பட்டு, ரதவீதிகள் வழியாக கோயிலுக்கு வந்தடைந்தார். ஏற்பாடுகளை தக்கார் ரவிசந்திரன், செயல்அலுவலர் ராமராஜா மற்றும் கோயில் அலுவலர்கள் செய்திருந்தனர். எட்டு நாட்கள் நடக்கும் இவ்விழாவில் தினமும் ஆண்டாள் பல்வேறு திருக்கோலங்களில் எழுந்தருள்கிறார்.