உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராகு - கேது பெயர்ச்சி விழா: கோவில்களில் பக்தர்கள் நேர்த்திக்கடன்!

ராகு - கேது பெயர்ச்சி விழா: கோவில்களில் பக்தர்கள் நேர்த்திக்கடன்!

கோவை : ராகு, கேது பெயர்ச்சியை முன்னிட்டு, கோவையிலுள்ள ஈஸ்வரன் மற்றும் அம்மன் கோவில்களில் உள்ள நவக்கிரஹ சன்னதிகளில், பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி, சிறப்பு வழிபாடு செய்தனர். வாக்கிய கணித பஞ்சாங்கப்படி, கன்னியிலிருந்து சிம்மராசிக்கு, ராகு, கேது நேற்று காலை பெயர்ச்சியாகினர். திருக்கணித பஞ்சாங்கப்படி, ஜன., 29 இரவு,12:00 மணிக்கு பெயர்ச்சியாகின்றனர். ராகு, கேது பெயர்ச்சியை யொட்டி, கோவையிலுள்ள ஏராளமான கோவில்களில் சிறப்பு வேள்விகளும், வழிபாடுகளும் நடந்தன. பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் உள்ள நவக்கிரஹ சன்னதி முன், சிறப்பு வேள்வி நடந்தது. காலை 9:00 மணி முதல், பகல் 1:00 மணி வரை சிறப்பு வழிபாடுகள் நடந்தன. பேரூர் சின்னக்கோவிலில்,, காலை 9:00 மணி முதல் பகல் 1:00 மணி வரை, நவக்கிரஹ சன்னதியில், ராகு, கேது பெயர்ச்சிக்காக சிறப்பு வேள்வி நடந்தன. கோனியம்மன், கோட்டை ஈஸ்வரன், ராம்நகர் கோதண்டராமர், பேட்டை ஈஸ்வரன், பெரியகடைவீதி மற்றும் சலிவன் வீதியிலுள்ள மாகாளியம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். ராகு, கேது நிவர்த்தி வழிபாடுகளும் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !