மொரட்டாண்டியில் 12 அடி உயர ராகு, கேது பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்!
ADDED :3619 days ago
புதுச்சேரி: மொரட்டாண்டி விஸ்வரூப மகா சனீஸ்வர பகவான் கோவிலில் ராகு, கேது பெயர்ச்சி விழா நடந்தது.
ராகு, கேது பெயர்ச்சியையொட்டி, மொரட்டாண்டியில் அமைந்துள்ள 12 அடி உயர ராகு, கேது பகவானுக்கு நேற்று ஆயிரம் லிட்டர் அபிஷேகம் நடந்தது. பின்னர் சுவாமி அலங்கரிக்கப்பட்டு பஞ்சலோக ஆபரண கவசம் சாற்றி, மகா தீபாராதனை நடந்தது. ராகு, கேது பகவானுக்கு 22 ஆயிரம் வடை, 108 கிலோ கொள்ளு சுண்டல் நைவேத்தியம் செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் சுண்டல், வடை பிரசாதமாக வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கீதாராம குருக்கள் செய்திருந்தார்.