பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடு, கோழி பலிக்கு தற்காலிக தடை
ADDED :3696 days ago
சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் பண்ணாரி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம், 17 ஆண்டுகளுக்குப் பிறகு, வரும், 20ம் தேதி நடக்கிறது. இதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. கும்பாபிஷேகம் முடிந்து நந்தா தீபம் ஏற்றி விழா நிறைவடையும் வரை ஆடு, கோழி பலி கொடுக்க தற்காலிகமாக தடை விதிக்கப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. வரும், 15 ம் தேதி தொடங்கி, மார்ச், 8ம் தேதி வரை, பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடு, கோழி பலியிட பக்தர்களுக்கு அனுமதியில்லை என, கோவில் இணை ஆணையர் மாரிமுத்து தெரிவித்துள்ளார்.