வேணுகோபால சுவாமி கோவிலில் திருக்கல்யாண உற்சவம்!
ADDED :3922 days ago
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் வேணுகோபால சுவாமி கோவிலில் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. நெல்லிக்குப்பம் பாமா ருக்குமணி சமேத வேணுகோபால சுவாமி கோவிலில் கூடாரவல்லி உற்சவம் நடந்தது. இந்து பெண்கள் மார்கழி மாதம் முழுவதும் ஆண்டாள் நினைவாக விரதமிருந்து திருப்பாவை பாடல்களை பாடி ஆண்டாளை வழிபடுவது வழக்கம். மார்கழி 27ம் நாள் விரதத்தை முடித்து ஆண்டாளை வழிபடுவது கூடாரவல்லி உற்சவமாகும். வேணுகோபால சுவாமி கோவிலில் கூடாரவல்லியை முன்னிட்டு ஆண்டாளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. வேணுகோபால சுவாமி ஆண்டாள் திருக்கல்யாண உற்சவத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பூஜைகளை ரமேஷ் பட்டாச்சாரியார் செய்தார்.