உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆண்டாள் - கண்ணன் திருக்கல்யாண விழா

ஆண்டாள் - கண்ணன் திருக்கல்யாண விழா

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மின்நகர் பரமேஸ்வரி அம்மன் கோவிலில், ஆண்டாள் பூச்சூடி திருக்கல்யாணம் நேற்று, வெகு சிறப்பாக நடைபெற்றது. காஞ்சிபுரம், மின்நகர் பகுதியில் பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில், மார்கழி மாதம் ஆண்டு தோறும், ஆண்டாள் திருப்பள்ளி எழுச்சி, திருப்பாவை, திருவெம்பாவை நடைபெற்று வரும்.அதை தொடர்ந்து திருக்கல்யாண விழாவும் நடைபெறும். அதன்படி நேற்று ஐந்தாம் ஆண்டு, ஆண்டாள் - கண்ணன் திருக்கல்யாண விழா, காலை, 10:45 மணியளவில் சிறப்பாக நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !