உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், கேட்டை) பெண்களால் பொருள்!

விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், கேட்டை) பெண்களால் பொருள்!

அனைவரிடமும் பண்புடன் பழகும் விருச்சிக ராசி அன்பர்களே!

சூரியன் சாதக நிலைக்கு வந்துவிட்டார். சுக்கிரனின் நற்பலன்கள் தொடரும். பணப்புழக்கத்துக்கு எந்தக் குறையும் இருக்காது. காரிய அனுகூலம் ஏற்படும். செல்வாக்கு அதிகரிக்கும். பொருளாதார வளம் கூடும். மற்ற கிரகங்கள் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் சிற்சில விஷயங்களில் பொறுமையாகவும், விட்டுகொடுத்து போகவும் வீண்விவாதங்களில் ஈடுபட வேண்டாம். பெண்களால் பொருள் சேரும். விருந்து, விழா என சென்று வருவீர்கள். கணவன், மனைவி இடையே அன்பு மேலோங்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

தொழில், வியாபாரத்தில் லாபம் சிறப்பாக இருக்கும். அரசின் சலுகை மற்றும் வங்கி கடன் எளிதாக கிடைக்கும். பங்குதாரர்களிடையே ஒற்றுமை ஏற்படும். ஜன. 17,18ல் எதிர் பாராத வகையில் பணம் கிடைக்கும். பிப். 6க்கு பிறகு போட்டியாளர்களால் இடையூறு வரலாம். அரசு வகையில் அனுகூலமான போக்கு குறையும். வரவு-செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும்.

பணியாளர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். அலைச்சல் இருக்கும். மேல் அதிகாரிகளிடம் அனுசரித்துப் போகவும். முயற்சி எடுத்தால்தான் கோரிக்கைகள் நிறைவேறும். வருமானத்தில் குறைவிருக்காது. ஜன. 26,27ல் சிறப்பான பலனை எதிர்பார்க்கலாம். மாத பிற்பகுதியில் வேலையில் அதிக அக்கறை யுடன் இருக்கவும்.

கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள், அரசிடம் இருந்து விருது ஆகியவை கிடைக்கும்.

அரசியல்வாதிகள் உழைப்புக்கு ஏற்ற பலனை எதிர்பார்க்க முடியாது.

மாணவர்கள் அதிக சிரத்தை எடுத்து படிக்க வேண்டியிருக்கும். சோம்பல் குணம் அதிகரிக்க இடமுண்டு என்பதால் பின்தங்கிய நிலைக்கு போகலாம். கவனம்.

விவசாயிகள் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். சிலருக்கு உழைப்புக்கு ஏற்ற வருவாய் கிடைக்காமல் போகலாம். விடாமுயற்சிக்கு தக்க பலன் கிடைக்கும். அதிக முதலீடு செய்ய வேண்டாம். புதிய சொத்து வாங்கும் வண்ணம் கைகூடாமல் போகலாம்.

பெண்கள் பிள்ளைகளால் பெருமை காணாலாம். ஜன. 19,20 சிறப்பான நாட்களாக இருக்கும். கணவர் மற்றும் குடும்பத்தாரிடம் நன் மதிப்பு பெறுவர். அண்டை வீட்டார் தொல்லை ஏற்படும்.

நல்ல நாள்: ஜன. 17,18,19,20,26,27,28,29,30, பிப். 2,3,4,7,8.

கவன நாள்: ஜன. 21,22,23 சந்திராஷ்டமம்

அதிர்ஷ்ட எண்: 2, 3 நிறம்: வெள்ளை, செந்துõரம்.

பரிகாரம்: செவ்வாய்க் கிழமை முருகனை வழிபட தவறாதீர்கள். விநாயகர் வழிபாடு முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்லும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !