உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1) சகோதரிகள் உதவி!

தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1) சகோதரிகள் உதவி!

எது வந்தாலும் ஏற்றுக்கொள்ளும் தனுசு ராசி அன்பர்களே!

ராசிக்கு 11ம் இடத்தில் இருக்கும் செவ்வாயால் நன்மை உண்டாகும். ஜன. 20ல் உங்கள் ராசிக்கு மாறும் சுக்கிரனும் நன்மை தருவர் . குரு பிப். 7ல் வக்கிரம் அடைவதால் உற்சாகம் பிறக்கும். நினைத்ததை வெற்றிகரமாக செய்து முடிக்கலாம். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும். குடும்பத்தில் இருந்த பின்னடைவு மறையும். தம்பதி இடையே ஒற்றுமை மேம்படும். உங்களை புரிந்துகொள்ளாமல் இருந்தவர்கள் உங்கள் மேன்மையை அறிந்து சரணடையும் நிலை வரலாம். தடைபட்ட திருமணம் நடக்க வாய்ப்புண்டு. பக்தி உயர்வு மேம்படும். புதிய வீடு, வாகனம் வாங்கலாம். வீட்டுக்கு தேவையான வசதிகள் கிடைக்கும். பெண்களால் பொருள் சேரும். விருந்து விழா என சென்று வருவீர்கள். அக்கம் பக்கத்தினரிடம் இந்த கருத்து வேறுபாடு, பொருள் இழப்பால் ஏற்பட்ட பிரச்னைகள் பிப். 6க்கு பிறகு மறையும். சகோதரிகள் உறுதுணையாக இருப்பர்.

தொழில், வியாபாரத்தில் தடைகளை உடைத்து முன்னேற்றம் காணலாம். ஜனவரி பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனங்கள் முன்னேற்றம் அடையும். ஜனவரி 19,20ல் எதிர்பாராத வகையில் பணவரவு இருக்கும்.

பணியாளர்களுக்கு குருவின் பலத்தால் முன்னேற்றம் கிடைக்கும். மேல் அதிகாரிகளின் அனுசரணை தொடரும். ஜனவரி 28,29,30ல் கோரிக்கைள் நிறைவேறும். இடமாற்றம் இருக்குமோ என்ற பீதி மறைந்து விடும்.

கலைஞர்களுக்கு புகழ் பாராட்டு, புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.

அரசியல்வாதிகளுக்கு புகழ், பாராட்டு எதிர்பார்த்தபடி இருக்கும்.

மாணவர்கள் அதிகமாக உழைக்க வேண்டியது இருக்கும். ஆசிரியர்களின் அறிவுரையை கேட்டு நடக்கவும். மாத பிற்பகுதியில் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும்.

விவசாயிகளுக்கு வளம் கொழிக்கும் மாதமாக இருக்கும். பசு-கன்றுகள் மூலம் நல்ல பணப்புழக்கத்தை எதிர்பார்க்கலாம். புதிய சொத்து வாங்கலாம். வழக்கு விவகாரங்கள் சாதகமாகும்.

பெண்கள் குடும்பத்தோடு புனிதஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலனை பெறுவர். சுயதொழில் செய்பவர்களுக்கு வங்கி கடன் எளிதாக கிடைக்கும். புத்தாடை, நகை வாங்கலாம்.

நல்ல நாள்: ஜன. 19,20,21,22,23,28,29,30,31, பிப்.1,5,6,9,10

கவன நாள்:  ஜன. 24,25 சந்திராஷ்டமம்

அதிர்ஷ்ட எண்: 3,7 நிறம்: வெள்ளை, சிவப்பு.

பரிகாரம்: பத்திரகாளிக்கு எலுமிச்சை மாலை அணிவித்து வணங்குங்கள். புதன்கிழமை பசுவுக்கு பசுந்தழை போடுங்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !