உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கும்பம்: (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3) அரசின் சலுகை!

கும்பம்: (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3) அரசின் சலுகை!

நல்லெண்ணத்துடன் பழகும் கும்ப ராசி அன்பர்களே!

இந்த மாதம் புதன் பிப். 6 வரையும், சுக்கிரன் ஜன. 20க்கு பிறகும் நன்மை தருவர். குருபகவான் பிப்.7ல் வக்கிரம் அடைவதால் சிறப்பான பலன் தருவார். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வீட்டில் சுப நிகழ்ச்சி நடந்தேறும். செல்வாக்கு மேம்படும். பணப்புழக்கம் அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் உற்சாகமுடன் செய்வீர்கள். பெண்கள் உறுதுணையாக இருப்பர். ஆடம்பர பொருள் வாங்கலாம். பிப். 9,10 ல் சகோதரிகளால் பணம் கிடைக்கும். உறவினர் வருகையால் நன்மை கிடைக்கும்.

தொழில், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். அரசு வகையில் சலுகை கிடைக்கும். கூட்டாளிகளிடையே ஒற்றுமை ஏற்படும். புதிய தொழில் தொடங்க ஏற்ற காலம். பிப். 6 க்கு பிறகு எதிரி தொல்லை வரலாம். பகைவரை எதிர்த்து வெற்றிக் கொள்ளும் ஆற்றல் உண்டாகும்.

பணியாளர்கள் முன்னேற்றத்தைக் காணலாம். பதவி உயர்வுக்கு தடை வராது. சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பர். பிப். 2,3,4ல் சிறப்பான பலனை எதிர்பார்க்கலாம். பணியாளர்களுக்கு விரும்பிய இட மாற்றம் கிடைக்க வாய்ப்புண்டு. பிப். 6 க்கு பிறகு பணியாளர்கடினமாக உழைக்க வேண்டியது இருக்கும்.

கலைஞர்களுக்கு எதிரி தொல்லை ஜன.20 க்கு பிறகு மறையும்.அதன் பின் நன்மை உண்டாகும். புதிய ஒப்பந்தம் எளிதில் கிடைக்கும்.

அரசியல்வாதிகள் முன்னேற்றப் பாதையில் செல்வர். தொண்டர்களின் ஆதரவு கிடைக்கும்.

விவசாயிகள் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். ஆடு, மாடுவளர்ப்பின் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். மானவாரிப் பயிர்கள் மூலம் ஆதாயம் காணலாம்.புதிய சொத்து வாங்கும் எண்ணம் தள்ளிப் போகும்.

மாணவர்கள் புதனால் கல்வி வளம் பெறுவர். பிப். 6 க்கு பிறகு சிரத்தை எடுத்து படிக்க வேண்டியதிருக்கும். சக மாணவர்களிடம் விழிப்புடன் இருப்பது நல்லது.

பெண்கள் குடும்பத்தாரிடம் நன்மதிப்பு பெறுவர். ஜன. 20க்கு பிறகு பண வரவு இருக்கும். ஜன. 26,27ல் விருந்து, விழா என சென்று வருவீர்கள். உடல் நலம் சீராகும். மருத்துவச் செலவு குறையும்.

நல்ல நாள்: ஜன. 15,16,19,20,26,27 பிப்.5,6,7,8,11,12

கவன நாள்: ஜன. 28,29,30 சந்திராஷ்டமம்

அதிர்ஷ்ட எண்: 4,6       நிறம்: வெள்ளை, பச்சை

பரிகாரம்: சனிக்கிழமை பெருமாள் கோவிலுக்கு சென்று வாருங்கள். ராகு காலத்தில் துர்க்கைக்கு விளக்கேற்றுவது அவசியம். சாஸ்தா வழிபாடு நன்மையளிக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !