உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ரூ.77 லட்சத்துக்கு ஒரு லட்டு ஏலம்!

ரூ.77 லட்சத்துக்கு ஒரு லட்டு ஏலம்!

திருப்பதி: தெலுங்கானாவில் உள்ள, விராட் வெங்கடேஸ்வர சுவாமி லட்டு, 77 லட்சம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது. தெலுங்கானா மாநிலம், மேடக் மாவட்டத்தில், மகாலட்சுமி கோதா சமேத விராட் வெங்கடேஸ்வர சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில், மார்கழி மாதத்தின் இறுதி நாளன்று, கோதா கல்யாணம் நடக்கும். அந்த உற்சவத்தை ஒட்டி, கோவிலில், மிக பெரிய லட்டு பிரசாதம் தயாரிக்கப்படும். கல்யாண உற்சவம் முடிந்த பின், லட்டு ஏலம் விடப்படும். அதை ஏலம் எடுப்பவருக்கு, அனைத்திலும் வெற்றி கிடைக்கும் என்பது நம்பிக்கை. இதனால், லட்டு ஏலத்தில் பலர் பங்கேற்பர். அதன்படி, (ஜன.,15) முன்தினம், 25 கிலோ எடை லட்டு பிரசாதம் ஏலம் விடப்பட்டது. அதை, முன்னாள் துணை முதல்வர் ராஜ நரம்சிம்மாவின் மனைவி பத்மினி, 77 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !