உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புதுச்சேரி பெருமாள் கோவிலில் சுதர்சன ஹோமம்!

புதுச்சேரி பெருமாள் கோவிலில் சுதர்சன ஹோமம்!

புதுச்சேரி: புதுச்சேரி வரதராஜ பெருமாள் கோவில் ஸம்ப்ரோஷணத்தை யொட்டி இரண்டாம் நாள் சுதர்சன ஹோமம் நடந்தது.

புதுச்சேரி காந்தி வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ பெருந்தேவி சமேத வரதராஜபெருமாள் கோவில், ரூ. 4 கோடி செலவில் புனரமைப்பு பணிகள் முடிந்து, 20ம் தேதி ஸம்ப்ரோஷணம் நடக்கிறது. இதையொட்டி (ஜன.,15) முன்தினம் சுதர்சன ஹோமம் துவங்கியது. அன்று மாலை 5:00மணிக்கு, யஜமானர் சங்கல்பம்,  பகவத்பிரார்த்தனை, புண்யாஹம், அக்னிப் பிரதிஷ்டை, சுதர்சன ஹோமம் நடந்தது. (ஜன.,15) காலை 10:00 மணிக்கு இரண்டாம் கால சுதர்சன ஹோமம், பூர்ணாஹூதி, தீர்த்த பிரசாதம் வினியோகம் செய்யப்பட்டது. மாலை 6:00மணிக்கு ஸ்ரீ ஸீக்த ஹோமம், பூர்ணாஹூதி நடந்தது. (16ம் தேதி) யாகசாலை பூஜைகள் துவங்குகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !