உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அருணாச்சலேஸ்வரர் கோவிலில் மாட்டுபொங்கல் முன்னிட்டு நந்திக்கு சிறப்பு அபிஷேகம்!

அருணாச்சலேஸ்வரர் கோவிலில் மாட்டுபொங்கல் முன்னிட்டு நந்திக்கு சிறப்பு அபிஷேகம்!

திருவண்ணாமலை: மாட்டுபொங்கல் முன்னிட்டு திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ராஜகோபுரம் அருகில் பெரிய நந்தி பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், மற்றும் பலவகையான இனிப்புகள், பழங்கள் மற்றும் காய்கனிகளில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருவூடல் திருவிழாவையொட்டி உண்ணாமலையம்மன் சமேதரராய் அண்ணாமலையார்  ராஜகோபுரம் அருகில் உள்ள திட்டுவாயிலில் எழுந்தருளி சூரிய பகவானுக்கு காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் ஸ்வாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !