ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் குவியும் பக்தர்கள்!
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள்கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. ஜன.20 காலை 10 மணிக்கு ஆண்டாள் கோயில் தங்க விமானத்திற்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. இதற்காக நேற்று முன்தினம் யாகசாலை பூஜைகள் துவங்கியது. யாகசாலை பூஜை 2ம் நாளான நேற்று ஆடிப்பூர பந்தலில் எழுந்தருளிய ஆண்டாள், ரெங்கமன்னாரை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். யாகŒாலை பூஜைகளில் பத்ரிநாராயணபட்டர் தலைமையில் பட்டர்கள் முத்து, வாசுதேவன், கிரி, ஸ்தானீகம், அனந்தராமகிருஷ்ணன், சுதர்சனன் உட்பட பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் ராம்கோ சேர்மன் ராமசுப்பிரமணியராஜா, தக்கார் ரவிசந்திரன், செயல்அலுவலர் ராமராஜா உட்பட பல் துறை அதிகாரிகள் பங்கேற்றனர். மாடசாமி ஏ.டி.எஸ்.பி., தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கர்நாடகா, ஆந்திரா, கேரளா உட்பட பல மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் அதிகளவில் கோயிலுக்கு தரிசனம் செய்து வருகின்றனர்.