உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அப்பா பைத்தியம் சுவாமி கோவிலில் குரு பூஜை விழா

அப்பா பைத்தியம் சுவாமி கோவிலில் குரு பூஜை விழா

புதுச்சேரி: சித்தர் சற்குரு அப்பா பைத்தியம் சுவாமி கோவி லில் நேற்று குரு பூஜை விழா நடந்தது. திலாஸ்பேட்டை வீமகவுண்டன்பாளையம் சித்தர் சற்குரு அப்பா பைத்தியம் சுவாமிகள் கோவிலில், குரு பூஜை விழா நேற்று காலை 6.30 மணிக்கு திருவிளக்கு வழிபாட்டுடன் துவங்கியது. புனித நீர் வழிபாடு, ஆன் ஐந்து வழிபாடு, ஐங்கரன் வழிபாடு நடந்தது. காலை 7.30 மணிக்கு அப்பா பைத்திய சுவாமிகளுக்கு தமிழில் வேள்வி வழிபாடு, 9.௦௦ மணிக்கு வேள்வி நிறைவு மற்றும் பேரொளி வழிபாடு, 9.15 சிறப்பு திருமஞ்சனம், 10.30 மணிக்கு திருக்குட நன்னீராட்டு நடந்தது. முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் சபாபதி, அமைச் சர்கள் தியாகராஜன், ராஜவேலு, எம்.எல்.ஏ.,க்கள் பாலன், நேரு, சேர்மன்கள் வேல்முருகன், ஞான சேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பக்தர் களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !