ராமேஸ்வரத்தில் நாளை கும்பாபிஷேகம்!
ADDED :3706 days ago
ராமநாதபுரம்: ராமேஸ்வரத்தில், நாளை கும்பாபிஷேகம் நடப்பதை முன்னிட்டு, ராமநாதசுவாமி கோவில், போலீஸ் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. அக்னி தீர்த்தக்கடல், முக்கிய வீதிகள், மக்கள் கூடுமிடம், வாகன நிறுத்துமிடங்களில், கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. பிற மாவட்டங்களில் இருந்து, 1,200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். அனைத்து வாகனங்களும், பாம்பன் பாலத்திற்கு முன் சோதனை செய்த பின்னரே, ராமேஸ்வரத்திற்குள் அனுமதிக்கப்படும். பக்தர்களின் வாகனங்களை நிறுத்த, போதிய ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த, முக்கிய இடங்களில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு உள்ளன. வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசாரின் சோதனைக்கு பிறகே, கோவிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.