உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆண்டாள் கோயில் கும்பாபிஷகம்: விருதுநகருக்கு நாளை விடுமுறை

ஆண்டாள் கோயில் கும்பாபிஷகம்: விருதுநகருக்கு நாளை விடுமுறை

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் தங்க விமான கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நாளை (ஜன.,20) விருதுநகர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. கலெக்டர் ராஜாராமன் கூறியதாவது: ஆண்டாள் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஜன.,20ல் முக்கிய தேர்வுகளுக்கு இடையூறின்றி அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடப்படுகிறது. இந்த நாளை ஈடு செய்வதற்காக பிப்.,2 வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது, என்றார்.தேர்வுகள் மாற்றம்: ஜன.20ல் நடக்கும் பத்தாம் வகுப்பிற்கான அரையாண்டு தேர்வுகள் எவ்வித மாற்றமின்றி அட்டவணை படி நடைபெறும். ஆறு முதல் ஒன்பது வகுப்புகளு அன்று நடக்க வேண்டிய தேர்வுகள் ஜன.,23ல் நடக்கும், என முதன்மை கல்வி அதிகாரி புகழேந்தி தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !