தியாகராஜநகரில் நாளை ஆவணி அவிட்டம் விழா
ADDED :5215 days ago
திருநெல்வேலி : பாளை., தியாகராஜநகரில் நாளை ஆவணிஅவிட்டம் விழா நடக்கிறது. ஆவணி அவிட்டம் விழா நாளை (13ம் தேதி) நடக்கிறது. ரிக், யஜூர் ஆவணி அவிட்டம் தியாகராஜநகர் 14வது தெற்குத் தெரு ஆஸ்தீக சமாஜத்தில் நாளை கோபாலகிருஷ்ண வாத்யார் தலைமையில் நடக்கிறது. காலை 6.30 மணிக்கு காமோகார்ஷீத் ஜபமும், காலை 7.30 மணிக்கு ஹோமம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடக்கிறது. இரண்டாவது பகுதி ஆவணி அவிட்டம் காலை 9 மணி முதல் 11 மணி வரை நடக்கிறது. ஏற்பாடுகளை ஆஸ்தீக சமாஜம் நிர்வாகிகள் செய்துள்ளனர்.