உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தை கார்த்திகை.. பழநியில் குவிந்த பக்தர்கள்!

தை கார்த்திகை.. பழநியில் குவிந்த பக்தர்கள்!

பழநி,: தை மாத கார்த்திகையை முன்னிட்டு பழநியில் அதிகாலை முதல் குவிந்த தைப்பூச பாதயாத்திரை பக்தர்கள் 4 மணிநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். தைப்பூசவிழாவை முன்னிட்டு பழநிகோயிலுக்கு பாதயாத்திரை பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. நேற்று கார்த்திகை திருநாளை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு மலைக்கோயில் நடைதிறக்கப்பட்டது. பக்தர்கள் பால்குடங்கள், காவடி எடுத்து அபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தினர். ரோப்கார், வின்ச் ஸ்டேஷனில் ஒரு மணிநேரத்திற்கு மேல் காத்திருந்து மலைக்கோயில் சென்றனர். பொதுதரிசனம் வழியில் 4 மணிநேரத்திற்கு மேலாக காத்திருந்து மூலவர் ஞான தண்டாயுதபாணிசுவாமியை பக்தர்கள் தரிசனம் செய்தனர். கிரிவீதியில் தடையை மீறி நிறுத்திய வாகனங்கள், தள்ளுவண்டிகளால் போக்குவரத்து நெரிசலில் சிக்கி பக்தர்கள் சிரமப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !