ஆலங்குப்பம் கோவிலில் 24ம் தேதி கும்பாபிஷேகம்!
ADDED :3548 days ago
புதுச்சேரி: ஆலங்குப்பத்தில் சஞ்சீவிராய பெருமாள், அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் வரும் 24ம் தேதி நடக்கிறது. புதுச்சேரி அடுத்த ஆலங்குப்பம் கிராமத்தில் விநாயகர், சஞ்சீவிராய பெருமாள் (ஆஞ்சநேயர்), கோதண்டராமர், செங்கழுநீர் மாரியம்மன், அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆகிய கோவில்கள் அமைந்துள்ளன. இக்கோவிலில், ராஜகோபுரம், மூலவர் விமானம், மண்டபங்கள் புனரமைக்கப்பட்டு வண்ணம் தீட்டப்பட்டுள்ளது. திருப்பணி முடிந்ததையடுத்து, வரும் 24ம் தேதி, கும்பாபிஷேகம் நடக்கிறது. அதையொட்டி, யாகசாலை பூஜைகள் 20ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. வரும் 24ம் தேதி காலை 8:30 மணி முதல் 11:30 மணிக்குள் கோவில் கும்பாபிஷேகம் நடக்கிறது. ஏற்பாடுகளை, ஆலங்குப்பம் கிராம பஞ்சாயத்தார்கள், நிர்வாக குழுவினர் மற்றும் கிராம மக்கள் செய்துள்ளனர்.