உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வால்பாறை மாரியம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்!

வால்பாறை மாரியம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்!

வால்பாறை:  வால்பாறை மாரியம்மன் கோவிலில், திருக்கல்யாண உற்சவம் நடந்தது. வால்பாறை வாழைத்தோட்டம் எம்.ஜி.ஆர்., நகர்  ஸ்ரீமாரியம்மன் கோவிலின், 32ம் ஆண்டு விழா, கடந்த 18ம் தேதி துவங்கியது. நேற்று முன்தினம் இரவு, 7:00 மணிக்கு சக்தி கும்பம்  எடுத்து வரப்பட்டு, அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. நேற்று காலை, 10:00 மணிக்கு, எம்.ஜி.ஆர்., நகர், இந்திராநகர் மகளிரணி சார்பில்,  சுப்ரமணிய சுவாமி கோவிலிருந்து, அம்மனுக்கு சீர்வரிசை கொண்டு வரப்பட்டது. காலை, 11:30க்கு நடந்த திருக்கல்யாணத்தில், திரளான  பக்தர்கள் வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை, கோவில் தலைவர் வெள்ளைசாமி, செயலாளர் அர்ஜூணன், பொருளாளர் சரவணன் உட்பட  பலர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !