கள்ளக்குறிச்சி சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
ADDED :3549 days ago
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பகுதி சிவன் கோவில்களில் தை மாத பிரதோஷ வழிபாடு நேற்று நடந்தது. கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலம் செம்பொற்ஜோதிநாதர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது. இதையொட்டி, சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. கோவிலில் திருமுறை பாடல் பயிற்சி பெறும் குழந்தைகள், சாமிக்கு பன்னிரு திருமுறை விண்ணப்பம் செய்தனர்.
சின்னசேலம்: தென்பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர் கோவிலில் மூலவருக்கு சிறப்பு அலங்காரமும், நந்தீஸ்வரருக்கு அபிஷேகமும் நடந்தது. இதேபோல் சின்னசேலம் கங்காதீஸ்வரர் கோவில், ராயர்பாளையம் குமாரதேவர் மடம் பழமலைநாதர் கோவில், கூகையூர் சொர்ணபுரீஸ்வரர் கோவில் மற்றும் பஞ்சாட்சர நாதர் கோவில் ஆகியவற்றில் பிரதோஷ வழிபாடு நடந்தது.