சங்குதீர்த்தகுளத்தில் குளத்தில் உழவார பணி
ADDED :3551 days ago
மாமல்லபுரம்: திருக்கழுக்குன்றம், சங்குதீர்த்தகுளத்தில், பக்தர்கள் நேற்று, உழவார பணி மேற்கொண்டனர்.திருக்கழுக்குன்றத்தில், வேதகிரீஸ்வரர் கோவில் சங்குதீர்த்தகுளம், சில ஆண்டுகளாக மழையின்றி வறண்டிருந்தது. சமீபத்தில் பெய்த கன மழையின் போது குளம் நிரம்பியது. இக்குளத்தில், தைப்பூச தெப்ப உற்சவம், வரும் 24ம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து, குளத்தின் நாற்புற படிகளில் இருந்த குப்பை, செடிகளை பக்தர்கள் நேற்று அகற்றி துாய்மைப்படுத்தினர்.