உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வள்ளலார் அருள்மாளிகையில் நாளை முதல் தைப்பூச விழா

வள்ளலார் அருள்மாளிகையில் நாளை முதல் தைப்பூச விழா

விழுப்புரம்: விழுப்புரம் கிழக்கு பாண்டிரோடு வள்ளலார் அருள்மாளிகை சன்மார்க்க சங்கத்தில் தைப்பூச விழா நடக்கிறது. விழாவையொட்டி, நாளை அதிகாலை 5:30 மணிக்கு அருட்பெருஞ்ஜோதி தீபம் ஏற்றுதல், 6:00 மணிக்கு அகவல் பாராயண வழிபாடு, 7:30 மணிக்கு கொடியேற்றம், காலை 10:00 மணிக்கு திருத்தேர் வீதியுலா நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து 24ம் தேதி வள்ளலாரின் 145ம் ஆண்டு தைப்பூச ஜோதி தரிசன விழாவையொட்டி, ஏழு திரைகள் நீக்கி ஆறு கால ஜோதி தரிசனம் நடக்கிறது. இந்த ஜோதி தரிசனம் 24ம் தேதி காலை 6:00 மணிக்கும், காலை 10:00 மணிக்கும், பகல் 1:00 மணிக்கும், இரவு 7:00 மற்றும் 10:00 மணிக்கும், 25ம் தேதி காலை 5:30 மணிக்கும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !