பரமக்குடியில் பிரதோஷ வழிபாடு
ADDED :3752 days ago
பரமக்குடி; பரமக்குடியில் உள்ள சிவன் மற்றும் பெருமாள் கோயில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது.எமனேஸ்வரம் எமனேஸ்வர முடையவர் கோயிலில் பிரதோஷ நந்திக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. உமையாள் சமேத எமனேஸ்வர முடையார், ரிஷப வாகனத்தில் வீதி வலம் வந்தார். பரமக்குடி ஈஸ்வரன் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், நயினார் கோவில் நாகநாதசுவாமி கோயில்களில் நந்திக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடுகள் நடந்தது. சுவாமி-அம்பாள் ரிஷப வாகனத்தில் கோயிலை சுற்றி வீதிவலம் வந்தனர். பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயிலில், ஆண்டாள் சந்நதி முன்பு அருள்பாலிக்கும் லெட்சுமிநரசிம்ம ருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.