கோயிலில் அபிஷேகம்!
ADDED :3940 days ago
கோயிலில் சுவாமிக்கு பூஜை நடக்கும்போது விதவிதமாக அபிஷேகம் செய்யப்படும். இதற்கான காரணத்தை தெரிந்து கொள்ளுங்கள். நதிகள், கடலில் சங்கமிக்கும் போது நதி என்ற பெயர் மறைந்து விடுகிறது. இதுபோலவே மனிதனும் தன்னை இழந்து பரமாத்வாகிய இறைவனிடம் ஒன்றி கலக்க வேண்டும் என்பதை அபிஷேகம் உணர்த்துகிறது. விநாயகர், முருகன், சிவன் ஆகியோருக்கு விபூதி அபிஷேகம் செய்ய வேண்டும். மற்ற அபிஷேகங்களை எந்த தெய்வத்திற்கு வேண்டுமானாலும் செய்யலாம்.