எல்லா தெய்வப் படங்களிலும் பாம்பு இடம் பெற்றிருக்கிறதே.... ஏன்?
ADDED :3940 days ago
நாகாபரணம் என்று இதற்குப் பெயர். தெய்வ அணிகலன்களில் மோதிரம், கங்கணம், ஹாரம்(மாலை), பூணுõல் ஆகிய அணிகலன்களில் பாம்பு முத்திரை இடம் பெற வேண்டும் என்று சிற்ப சாஸ்திர இலக்கணம் கூறுகிறது. சிவனுடைய ஆபரணங்களில் முக்கியமானது நாகம். ஜடாமுடி, கழுத்து, இடுப்பு என உடம்பில் நாகங்களையே ஆபரணமாக அவர் அணிந்திருப்பார். நாம் எதையெல்லாம் ஒதுக்குகிறோமோ, அவற்றை தன்னிடம் வைத்துக் கொண்டு அவற்றிற்கும் பாதுகாப்பும் பெருமையும் தந்து அருள்புரிகிறார்.