பொறாமையிலிருந்து விடுபட பரிகாரம்!
ADDED :3940 days ago
இந்த குணம் இருந்தால் நம்மை மாற்றிக் கொள்ள நிறைய வழிகள் உள்ளன. முதலில் நம்மைப் பற்றிய தாழ்வான எண்ணத்தை விட வேண்டும். நம்மை விட தாழ்ந்த நிலையில் இருப்பவர்களைக் காட்டிலும், நாம் உயர்ந்திருப்பதை எண்ணி மகிழ வேண்டும். பிறருடன் நம்மை ஒப்பிடக் கூடாது. பணம், பதவி இவைகளுக்கு அப்பாற்பட்டு குணத்திலும், தர்மம் செய்வதிலும் பிறரிடம் அன்பு காட்டுவதிலும் நமக்கு நிகர் நாம் தான் என்று பெருமிதம் கொள்ள வேண்டும். இதைக் கடைபிடித்தால் நம்மிடம் பொறாமை நெருங்காது. பிறரிடம் இந்த குணத்தைக் கண்டால் அவர்களை விட்டு விலகி நில்லுங்கள். அவர்களால் உங்கள் மனமகிழ்ச்சி பாதிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.