உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிறர் பற்றி ஆராயாதே!

பிறர் பற்றி ஆராயாதே!

குடும்பத்திலோ அல்லது பணியிடத்திலோ பேசுவதை ஒட்டுக்கேட்டு, பிறரிடம் சொல்பவர்களை நபிகள் நாயகம் கண்டிக்கிறார். தங்கள் குடும்ப ரகசியம் வெளியே கசியக்கூடாது என நினைப்பவர்கள், தங்களுக்குள் மெதுவாகப் பேசுவார்கள். ஒட்டுக்கேட்பவனின் காதில் அது அரைகுறையாக விழும். இதுபற்றி பிறரிடம் சொல்லும் போது, காதில் விழாத சந்தேகத்திற்குரிய வார்த்தைகளை இட்டுக்கட்டி சொல்ல வேண்டி வரும். இப்படி வெளியில் கசியும் அந்த ரகசியம், சம்பந்தப்பட்ட குடும்பத்தையே அழித்து விட வாய்ப்புண்டு. நாயகம் இதுபற்றி கூறும் போது, நீங்கள் தவறான சந்தேகங்களை விட்டு உங்களைக் காத்துக் கொள்ளுங்கள். ஏனெனில், சந்தேகத்துடன் சொல்லப்படுகிற விஷயம், அனைத்தையும் விட பொய்யான விஷயமாகும். பிறரைப் பற்றி செய்திகள் சேகரித்துக் கொண்டு திரியாதீர்கள். பிறரைப் பற்றி துருவித்துருவி ஆராயாதீர்கள். உங்களுக்குள் தரகு வேலையில் ஈடுபடாதீர்கள். ஒருவர் மீது ஒருவர் வெறுப்புக் கொள்ளாதீர்கள். ஒருவரையொருவர் துண்டிக்க முனையாதீர்கள். இறைவனின் அடியார்களாய் விளங்கி ஒருவருக்கொருவர் சகோதரர்களாக வாழுங்கள், என்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !