நேர்மையாய் வாழ்வதில் தோல்வியே இல்லையே!
*நேர்மையாக வாழ்ந்தால் வெற்றி உறுதி. நீங்கள் செய்யும் ஒவ்வொரு நேர்மையான செயலுக்கும் உரிய பரிசும் அந்த செயலுக்குள்ளேயே அடங்கி இருக்கும்.
*நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை உங்களுக்குள் பிறக்கட்டும். உடம்பின் ஒவ்வொரு அணுவிலும் இந்த நம்பிக்கை பரவ வேண்டும். எப்போதும் இதைச் சிந்தித்தால் வாழ்வில் சாதனை படைக்க முடியும்.
*சோர்வுக்கு ஒருபோதும் ஆளாகாதீர்கள். புத்துணர்ச்சி தரும் எளிய உடற்பயிற்சிகளைச் செய்யுங்கள். மனதை மேம்படுத்தும் நல்ல நுõல்களைப் படியுங்கள்.
*எந்த புதிய முயற்சியில் ஈடுபட்டாலும், அதை கடவுளுக்கு அர்ப்பணிக்க வேண்டும் என்ற ஒன்றே உங்களின் குறிக்கோளாக இருக்க வேண்டும்.
*பேசாமல் இருக்க கற்றுக் கொண்டால் வீண் பிரச்னை, தொல்லையில் இருந்து தப்பிக்கலாம். எப்போதும் அமைதியாக இருங்கள். மனவலிமை பெற இதுவே சிறந்த வழி.
*அதிகாலையில் கண் விழிப்பதும், எப்போதும் கடவுள் சிந்தனையில் இருப்பதும் ஆன்மிகத்தில் அடியெடுத்து வைப்பதற்கான தகுதிகளாகும்.
*மனிதர்கள் எப்போதும் அடுத்தவர் விஷயங்களில் தலையிட விரும்புகிறார்கள். பிறர் கேட்காத போதே தங்களுடைய அபிப்ராயத்தை சொல்லும் பழக்கமே இதற்கான அடிப்படைக் காரணம்.
*காலத்தை வீணாக்காதீர்கள். பின்னால் பார்த்துக் கொள்ளலாம் என்று எதையும் தள்ளிப் போடாதீர்கள். நல்லது என தீர்மானித்தால் அதில் உடனடியாக ஈடுபடுவதே சிறந்ததாகும்.
*சாப்பிடும் முன் சில நொடிகள் பிரார்த்தனை செய்யுங்கள். வாழ்வில் சாதிப்பதற்கான உடல் வலிமையையும், மன வலிமையையும் அந்த உணவு அளிக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள்.
*தன்னந்தனியாக யாரும் உலகில் இருக்க முடியாது. உடனிருந்து உதவி செய்தும், தக்க வழியைக்
காட்டிக் கொண்டும் கடவுள் உங்களுடனேயே இருக்கிறார்.
*தற்புகழ்ச்சி முன்னேற்றத்திற்கான தடை. விழிப்புடன் இருந்தால் மட்டுமே இந்த முட்டாள் தனத்தை ஒருவனால் தவிர்க்க முடியும்.
*குறை இல்லாத மனிதனே உலகத்தில் இல்லை. ஆனால், பிறருடைய குறைகளைப் பேசுவதால்
நம் நிலை இன்னும் மோசமாகி விடுகிறது.
*மலர்கள் என்பவை கடவுளின் ஆசியைச் சுமந்து வரும் பரிசுப் பொருள்கள். ஆகாயத்தின் மேன்மை தன்மை மலர்களால் பூமிக்கு அளிக்கப்படுகிறது. ஒவ்வொரு மலரும் கடவுளின் மேன்மையை பறைசாற்றுகிறது.
*உலகத்தில் மோசமான வேலை என்ற ஒன்று கிடையாது. வேலை செய்வதில் தான் மோசமான மனிதர்கள் இருக்கிறார்கள். அவரவர்களின் மனநிலையே இதற்கான காரணம்.
*வாழ்க்கையை விட்டு ஓடுவது என்பது ஆன்மிகம் அல்ல. தன்னைப் பிறருக்கு அர்ப்பணிப்பதே
உண்மையான ஆன்மிகம். அதில் சிறிதும் சுயநலம் இருக்கக்கூடாது. (மகான் ஸ்ரீ அன்னை)